காதலரை பிரிய காரணம் இதான்...அப்போது வலிச்சது!! பல ஆண்டுகள் கழித்து நடிகை லாஸ்லியா ஓபன் டாக்

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Edward Mar 02, 2026 02:30 AM GMT
Report

நடிகை லாஸ்லியா

இலங்கை செய்தி தொகுப்பாளராக இருந்து சென்னைக்கு வந்தவர் தான் நடிகை லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த லாஸ்லியா, இந்நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்தார்.

மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, காதல் உடைந்தது பற்று பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

காதலரை பிரிய காரணம் இதான்...அப்போது வலிச்சது!! பல ஆண்டுகள் கழித்து நடிகை லாஸ்லியா ஓபன் டாக் | Losliya Opens Up About Breakup With Kavin And Love

அதில் லாஸ்லியா, எனக்கும் என் முன்னாள் காதலருக்கும் அடிக்கடி சண்டை வரும், அதனால் நாங்கள் பிரிய வேண்டும் என்ற சூழல் வந்தது. பிரிந்தபோது 1 வருஷத்திற்கும் மேல் எனக்கு வலியை கொடுத்தது. ஆனால் அன்று ஆரோக்கியமாக நாங்கள் பிரிந்தது, நல்லது என்று தான் நினைக்கிறேன்.

பிக்பாஸுக்கு உள்ளே எங்களுக்கு இயற்கையாக காதல் வந்தது. வெளியில் வந்ததும் அந்த சூழல் எங்களுக்கு ஒத்துவரவில்லை என்று லாஸ்லியா வெளிப்படையாக பல ஆண்டுகள் கழித்து கூறியிருக்கிறார்.