பிச்சைக்காரன் வாந்தி எடுத்தமாதிரி இருக்கு!! ப்ளடி பெக்கர் படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை..
ப்ளடி பெக்கர்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளடி பெக்கர்.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளியான பிளடி பெக்கர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் அவரது ஸ்டைலில் விமர்சித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்
அதில், உழைக்காமல் காசு சம்பாதிக்க ஆசைப்படும் ஹீரோ காலியாக பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இவர் பார்த்து வைத்திருக்கும் மாளிகை ஒன்றில் ஒருநாள் தங்கியிருக்க வேண்டும் என்ற ஆசை தான் ஹீரோவுக்கு இருந்துள்ளது.
அப்படி ஒருநாள் நடக்க அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஒரு நல்ல கதை அல்லது நல்ல இயக்குநர் எனில் படத்தின் மைய கதாபாத்திரம் என்ன நினைக்கிறதோ அதை படம் பார்ப்பவர்களும் நினைக்க வேண்டும்.
ஹீரோ அழுதாலும், சிர்ஹ்த்தாலும் நமக்கு அழுகை, சிரிப்பு வரவேண்டும். இந்த படத்தின் ஹீரோ அந்த பங்களாவில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என ஆசைப்படுவான், நமக்கும் அதே எண்ணம் தான். அதாவது படத்தைவிட்டு ஓடிவிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறது.அந்தவகையில் இயக்குநர் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
பிச்சைக்காரன் வாந்தி எடுத்தமாதிரி
முடிஞ்சா சிரிச்சி பாருங்கடா என சவால் விட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதிலும் அவர்களுக்கே வெற்றி. ஒரு சீனிலும் சிரிப்பு வரல. இது காமெடி படமா? சீரியஸ் படமா? கிரைம் திரில்லர் படமா? ஹாரர் படமா? என்று யோசித்து பைத்தியம் பிடித்துவிட்டது.
பிச்சைக்காரன் வாந்தி எடுத்தமாதிரி ஒரு படத்தை எடுத்து வெச்சிருக்காங்க. அதைத்தான் குறியீடாக வைத்து ப்ளடி பெக்கர்-ன்னு தலைப்பு வைத்திருக்காங்க.
தீபாவளிக்கு ஜாலியாக இருக்கும் என இந்த படத்திற்கு போனால் மொக்கை மொக்கையாக காமெடி செய்து காட்டி மொக்கையாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை எடுத்தவங்க சரியான பைத்தியம் போல என நினைத்து படத்தை பார்த்தால், படம் முடியும்போது தான் இவர்கள் சரியாகாத பைத்தியம் என்பது நமக்கு பிரிகிறது. பிளடி பெக்கர்ஸ் என்று கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.