வாரி சுருட்டி ஏப்பம் விடும் ரெட் ஜெயண்ட்!! தலையில் துண்டு போட்டு புலம்பும் லைக்கா..
லைக்கா நிறுவனம் பல நஷ்டத்தால் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. 3 பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் கமிட் செய்து என்ன செய்வது என்று திக்கு முக்காடி வருகிறது. வேட்டையன், விடாமுயற்சி, இந்தியன் 2 போன்ற பெரிய படங்களை தயாரித்து சிக்கத்தவித்து வருகிறது. இதனால் ரஜினிகாந்த் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.
இந்தியன் 2 படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும் நடந்து வருகிறது. பிரம்மாண்ட பாடலை எடுக்க நினைத்த சங்கர், லைக்கா நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் அந்த பாடல் இல்லாமலே படத்தை முடித்துவிட்டார். ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 ரிலீஸ் ஆக இருப்பதால் இப்படத்தின் லாபத்தை வைத்து விடாமுயற்சி படத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டம் போட்டுள்ளனர் லைக்கா.
ஆனால் அதற்கும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அதற்கு காரணமாக இருப்பது ரெட் ஜெயண்ட் தானாம். இப்படத்திற்கு ஏற்பட்ட பல சிக்கல்களை தீர்த்து வைத்ததே உதயநிதி தான். இந்தியன் 2வின் வியாபாரமும் அமோகமாக நடந்து வரும் நிலையில் பணம் கைக்கு வந்துவிடும் என எண்ணிய லைக்காவிற்கு தற்போது முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
இந்த படத்திற்காக நாங்கள் நிறைய பணம் செலவு செய்துள்ளோம், ஆகையால் லாபத்தை முதலில் நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்று லைக்காவிற்கு கண்டீசன் போட்டு செக் போட்டுள்ளார். வேட்டையன், விடாமுயற்சி படங்களுக்கு பணம் இல்லாமல் திண்டாடும் நிலையில் உதயநிதி தரப்பு இப்படியொரு செயலை செய்துள்ளது லைக்கா நிறுவனத்திற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு மேலும் மேலும் சிக்கல் வந்த வண்ணமே இருக்கிறது. இந்தியன் 2 கிட்டத்தட்ட 250 கோடியில் ஆரம்பித்து 350 கோடி வரை செலவு ஆகிவிட்டது. இவ்வளவு செலவு செய்தும் சங்கருக்கு முழு திருப்தி கிடைக்கவில்லையாம். ஆனால் சங்கர், கமல் இருவரும் உச்சம் அடைந்திருக்கிறார்கலாம். ஆடியோ லான்சில் கூட கமல் மிகப்பெரிய சக்சஸ் ஆகும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.