ஒரேஒரு டைட்டிலுக்காக 1 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்! சூப்பர் ஸ்டார் பிராண்ட்-னா இதுதான்

Raghava Lawrence Rajinikanth
By Edward Jun 13, 2022 12:09 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் 2005ல் உருவான படம் சந்திரமுகி. கிட்டத்தட்ட 200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன் தாரா, விஜயகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி சுமார் 650 கோடிக்கும் மேல் 700 நாட்கள் ஓடி வசூல் வேட்டையாடியது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பார் பி. வாசு என்று எதிர்ப்பார்த்த நிலையில் 2020 ஆம் ஆண்டு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கபட்டது. கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்படத்தினை லைக்காநிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறி லைக்கா நிறுவனத்தை தயாரிக்க திட்டமிட்டனர். இந்நிலையில், சந்திரமுகி படத்தினை சிவாஜி கணேசன் பிரொடக்ஷன்ஸ் தான் தயாரித்திருந்தது. படத்தின் டைட்டில் டைட்ஸ் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

இதனால் லைக்கா நிறுவனம் சந்திரமுகி டைட்டிலை வாங்க சுமார் 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இதற்காக நிறுவனத்தை வழிநடத்தும் ராம்குமாரிடம் சென்று கையெழுத்திட்டு லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்ற ஒரு நடிகரின் பிராண்ட் தான் சந்திரமுகி படம். அதற்காகவே இப்படத்தின் டைட்டில் டைஸ்ட் விற்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கவுள்ளாராம்.