அக்கடதேசத்துல பணம் சம்பாதிக்கதான் நாங்கள் கோடியில சம்பளம் கொடுத்தோமா? இயக்குநர் சங்கருக்கு லைகா கொடுத்த அடி!

By Edward Apr 15, 2021 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவை தாண்டி பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை நடிகர் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் இருந்து தக்கவைத்து வருபவர் இயக்குநர் சங்கர். இந்தியன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சங்கர் எந்திரன் 2.0 படத்திற்கு பிறகு இந்தியன் 2வை இயக்க முடிவு செய்து 80 சதவீத படப்பிடிப்பினை முடித்தார்.

இதற்கிடையில் தெலுங்கு நடிகரை வைத்து படத்தில் ஒப்பந்தமாகி படப்பிடிப்பை ஆரம்பித்தார்.\ ஆனால், சங்கரை வைத்து கமலுடன் இந்தியன் 2 படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது.

ஆரம்பத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு பின்னர் கொரானா சூழ்நிலை, படப்பிடிப்பு தளத்தில் விபத்து என முற்றிலும் இந்தியன் 2 படத்தை முடக்கியது. இதன் காரணமாக பட்ஜெட்டை குறைக்குமாறு லைகாக கேட்க, இதற்குமேல் குறைத்தால் படம் படமாக இருக்காது என சங்கர் சொல்ல வந்தது பஞ்சாயத்து.

இதனால் டென்ஷனான சங்கர் போயா என பொட்டியை கட்டிவிட்டார். தற்போது ஷங்கர் அடுத்தடுத்து தெலுங்கில் ஒரு படமும் இந்தியில் ஒரு படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனைப் பார்த்த லைகா நிறுவனம் சங்கரை சும்மா விடக்கூடாது என முடிவெடுத்துள்ளதாம்.

ஏற்கனவே ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது என கேஸ் போட்டு அந்த கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அதே கேசை நோண்டி எடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதாம் லைகா நிறுவனம். தற்போது அதற்கு லைகா நிறுவனத்திற்கு மேல் முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்து வழிக்காட்டியது இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.