கன்னிகா லேட்டா குழந்தை பெத்துக்க இதான் காரணம்!! இரட்டை குழந்தைக்கு அப்பாவான சினேகன்..
சினேகன் - கன்னிகா
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக பல படங்களுக்கு பாடல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் சினேகன். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த சினேகன், சீரியல் நடிகை கன்னிகாவை கடந்த 2021ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து சினேகன் - கன்னிகா தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அதை இணையத்தில் வீடியோவாக பகிர்ந்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
இரட்டை பெண் குழந்தை
இந்நிலையில், பேட்டியொன்றில், கல்யாணமாகி 3 ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஏனென்றால், காதலிக்க அந்த ஏழு வருடமும் நாங்கள் எங்கேயும் சுற்றியது கிடையாது.
அதனால் திருமணமாகியபோது சுற்றாததை எல்லாம் இப்போது சுற்றுவோம் என்று இருந்தோம். கன்னிகாவுக்கு மலைப்பிரதேசங்களும் , குளிர் பிரதேசங்களும் ரொம்பவே பிடிக்கும். அந்தமாதிரி இடங்களுக்கு நானே டிரைவர், கன்னிடா நடத்துனர் என்பது போல் நிறைய சுற்றினோம் என்று சினேகன் கூறியிருக்கிறார்.