இதுவும் போச்சா? ஒரே நாளில் மாமனிதன் படத்துக்கு வந்த சோதனை? விஜய் சேதுபதிக்கே இப்படியா!!
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. பிட்சா படத்தில் ஆரம்பித்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து அனைவராலும் கவனிக்கக்கூடிய நடிகராக மாறினார்.
பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த விஜய் சேதுபதி சமீபத்தில் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் வெற்றிப்பெறவில்லை. அப்படி துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தர்மதுறைக்கு படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 2018ல் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவான மாமனிதன் படம் வெளியாக காத்திருந்தது. இப்படத்தில் சில கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜாவுடன் பிரச்சனை ஏற்பட்டு படம் 4 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது.
தற்போது இப்படம் பிரச்சனைகளை தாண்டி ஜூன் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. வெளியான முதல் நாள் மட்டுமே தமிழகத்தில் ரூ. 1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. படம் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்று வந்தாலும் தர்மதுறை படத்திற்கு இணையாக இல்லை என்று தான் கூறி வருகிறார்கள்.