Blue-சட்டை மாறனுக்கு பின்னால் இப்படியொரு எமோஷ்னல் ஸ்டோரியா?

Youtube Gossip Today
By Edward Oct 10, 2022 03:10 PM GMT
Report

இணையம் மூலம் திரைப்படங்கள் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை வெளியிட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வெளியாகவும் திரைப்படங்களை விமர்சிப்பதோடு, அப்படத்தில் நடித்த கலைஞர்கள் இயக்குனரின் இயக்கம் எப்படி இருக்கிறது என்று படுமோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சித்து சர்ச்சையில் சிக்கி வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன்.

Blue Sattai என்ற பெயர்

சமீபத்தில் கூட பல இயக்குனர்களின் கோபத்திற்கு ஆளாகியு கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறார். இயக்குனர் பார்த்திபன், கெளதம் வாசுதேவ் மேனன் கூட அவரை நேரடியாக விமர்சித்து தாக்கி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் தனக்கு எப்படி Blue Sattai மாறன் என்ற பெயர் வந்தது பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். வார வாரம் வெள்ளிக்கிழமை வந்தால் வெளியாகிய படத்தின் விமர்சனத்தை பற்றி பேசி வீடியோவை செய்து வந்தோம். அதற்காக நான் அணியும் ஆடையின் கலர் ரிப்பீட் ஆகக்கூடாது என்பதற்காக வாரம் வாரம் ஒரு சட்டையை பயன்படுத்தினோம்.

ஆயிரம் ரூபாய் செலவு

ஆனால் அது வாங்க வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டும். அப்படியானால் ஒரு வருடத்திற்கு 52 சட்டைகள் வாங்க நேரிடும். அப்போது அவ்வளவு சட்டை வாங்க வசதி இல்லாமல் போனது. அதன்பின் தா ஒரே சீருடை மாதிரி மாற்றலாம் என்று நினைத்து ப்ளூ சட்டையை போட்டு பார்த்து வீடியோவை வெளியிட்டோம். அது செட்டாகியதால் அதையே தொடர்ந்து போட முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். மேலும் அப்போது கருப்பா ஒருத்தன் இருக்கான் என்று கூறியவர்கள் தற்போது ப்ளூ சட்டை மாறன் என்ற அடையாளத்தை கொடுத்தனர் என்று தெரிவித்துள்ளார் மாறன்.