முதல் மனைவியுடன் ஒன்றாக நிகழ்ச்சிக்கு வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. வைரல் புகைப்படம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளிவந்தது.
மேலும், தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா பதிவு செய்திருந்தார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாம் திருமணம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடவில்லை. இந்த நிலையில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது முதல் மனைவி ஸ்ருதி உடன் ஒன்றாக சென்று பங்கேற்றுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளிவந்து வைரலாகி வருகிறது.
முதல் மனைவி உடன் இருக்கும் போதேதான், அவர் இப்படி இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறாரா என பலரும் தற்போது அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஆனால், எது உண்மையென அவர் கூறினால் மட்டுமே தெரியும்.