ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல!! ஜாய் கிரிஸில்டா..
ஜாய் கிரிஸில்டா
2025 ஆம் ஆண்டில் சினிமாத்துறையில் சில பரபரப்பான சம்பவங்கள் நடந்தது. அதிலும் மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப பிரச்சனை இன்று வரை பேசுபொருளாகவே இருந்து வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜன், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாம் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
இத்திருமணம் நடந்த சில நாட்களின் தான் கர்ப்பமாக இருக்கிறேன், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக போலிஸில் புகாரளித்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இன்னும் டி என் ஏ டெஸ்ட் எடுக்க ரங்கராஜ் வராமல் இருப்பதாக கூறி புகார் அளித்தும், இணையத்தில் சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார் ஜாய் கிரிஸில்டா.
வீடியோ
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துபாய்யின் பிரபல ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டு, ஷாருக்கானுடன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து, ஜாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், பொண்டாட்டி என்று கூறி அனுப்பிய வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.