விஜய், அரசியலில் இந்த 4 பேரை சமாளிப்பார்..எனக்கு நம்பிக்கை!! இயக்குநர் எச் வினோத்...
இயக்குநர் எச் வினோத்
கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் தான் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பல நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் தளபதி திருவிழா என்ற பெயரில் மலேசியாவில் கடந்த 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் இயக்குநர் எச் வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
4 பேரை சமாளிப்பார்
விஜய் அரசியலுக்கு வரலைன்னா தான் எனக்கு ஆச்சரியம், அரசியல்ல நான் 4 வகை மனிதர்களை பார்க்கிறேன். 1 - புத்திசாலிகள், 2 - முட்டாள்கள், 3 - புத்திசாலி மோசடிக்காரர்கள், 4 - முட்டாள் மோசடிக்காரர்கள்.

இந்த 4 வகையான மனிதர்களையும் விஜய் ஈஸியா சமாளித்துவிட்டார் என்றால், அரசியலில் ஜெயிப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று எச் வினோத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆடியோ லான்சின் போது, இது ரீமேக் படம், கொஞ்சம் முன்னபின்ன அப்படி இருக்கும், அதனால் ஈஸியா உள்ள புகுந்து அடிச்சிடலாம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். ஐயா இது தளபதி படம், அவ்வளவு தான் என்று தைரியமாக பேசியதும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.