விவாகரத்து பெற்று 2- ம் திருமணமா? முற்றுப்புள்ளி வைத்த மாதம்பட்டி மனைவி
மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
இவர் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
சமீபத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது காதலர் என்று கூறி அவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இது குறித்த செய்திகள் இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது.
மனைவி பதிலடி
இந்நிலையில், இந்த செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாதம்பட்டியின் மனைவி ஸ்ருதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு நான் தான் மாதம்பட்டி ரங்கராஜன் மனைவி என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.