சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! ஸ்டன்னிங் லுக்கில் இப்படி இருக்காங்களே..
சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.
சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.
அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, Doctorate ( Hons. ) in Performing Arts பட்டத்தை பெற்றிருக்கிறார்.
26 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் பாடல் பாடியும் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
வீடியோ
சமீபத்தில் பிரபல மாலின் 7-வது துவக்கவிழாவிற்கு சென்ற நித்யஸ்ரீ, அங்கிருந்த அனைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மிரட்டலான பாடல்களை பாடி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். அவரின் நியூ லுக் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.