பாக்ஸ் ஆபிஸ்: மதராஸி படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம்..

Sivakarthikeyan Box office Madharaasi
By Kathick Sep 15, 2025 01:30 PM GMT
Report

மதராஸி

முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் மதராஸி. இதற்கு முன் சிவா நடிப்பில் வெளிவந்த அமரன் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்: மதராஸி படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம்.. | Madharaasi Movie Box Office Collection Report

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த படம்தான் மதராஸி. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் என பலரும் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்: மதராஸி படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம்.. | Madharaasi Movie Box Office Collection Report

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்கள் இப்படம் பெற்றாலும், ஓரளவு நல்ல வரவேற்பை பாக்ஸ் ஆபிஸில் பெற்றது.

வசூல் 

இந்த நிலையில், 10 நாட்களை காத்திருக்கும் மதராஸி படம் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 10 நாட்களில் ரூ. 54.4 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படம் இதுவரை செய்துள்ள வசூலாகும். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: மதராஸி படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம்.. | Madharaasi Movie Box Office Collection Report