தன்னை விட மூன்று வயது பெரிய நடிகை மீது அந்த ஆசையை வைத்த மாதவன்..
Madhavan
By Kathick
நடிகர் மாதவன் இந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது ஒரு பக்கம் படங்களும், ஒரு பக்கம் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் தான் தி ரயில்வே மேன். இப்படத்தில் மாதவனுடன் இணைந்து ஜூஹி சாவ்லா நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஜூஹி சாவ்லா மீது தனக்கு திருமண ஆசை இருந்ததாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
இதில் 'நான் Qayamat Se Qayamat Tak படத்தை பார்த்தபோது நடிகை ஜூஹி சாவ்லா மீது திருமண ஆசை வந்தது. அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என அம்மாவிடவும் கூறினேன். அன்று என்னுடைய ஒரே நோக்கம் ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வது மட்டும்' என கூறியுள்ளார்.
நடிகை ஜூஹி சாவ்லா நடிகர் மாதவனை விட மூன்று வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.