கொஞ்ச பேச்சா பேசுன! அசிங்கமாயிடும் சார் ப்ளீஸ்! அதிகாரிகளிடன் கதறி கெஞ்சிய மதுவந்தி.. வீடியோ..

loan madhuvanti ygmahendran
By Edward Oct 15, 2021 02:54 AM GMT
Report

பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளான மதுவந்தி பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில், மதுவந்தியின் வசித்து வரும் வீட்டை சமீபத்தில் ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம் முடக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்ற மதுவந்தி, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார். முதலில் கடனை கட்டிவந்த மதுவந்தி பின் முறையாக பணம்கட்ட தவறியுள்ளார்.

இதனால் அந்த நிதி நிறுவனம் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மதுவந்தி உரிய பதில் அளிக்காத காரணத்தினால், அவரின் மேல் வழக்கு தொடரப்பட்டு மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவு பெறப்பட்டது. அதன்பின் அதிகாரிகள் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர்.