விஜய் படங்களை பார்க்க வேண்டாம்.. சர்ச்சையை கிளப்பிய சாமியார்
தளபதி 66
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த் என திரையுலக பட்டாளமே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடித்ததை அடுத்த, தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய சாமியார்
இந்நிலையில், பிரபல சாமியார் மதுரை ஆதீனம் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், சமீபத்தில் நடந்த விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாட்டில் இந்துக்களை அவமதிக்கும் வகையிலான வசனங்களை திரைப்படங்களில் பேசி வரும் நடிகர் விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஆதீனம் இப்படி பேசியதற்காக சமூக வலைத்தளத்தில் விஜய்யின் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.