நடிச்சதெல்லாம் நாசமா போச்சே! விக்ரமால் ஏமாற்றப்பட்ட நடிகைகள்..

simran vikram tamilactress vanibhojan dhruvvikram mahaan shrustidange
By Edward Feb 10, 2022 06:55 AM GMT
Report

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் பிரபல தொலைக்காட்சி சேனலில் தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மனதை ஈர்த்தவர் நடிகை வாணி போஜன்.

அந்த சீரியலால் நல்ல வரவேற்பை பெற்ற வாணி போஜன் ஓர் இரவு, ஓ மைக் கடவுளே, லாக்கப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

இதன்பின் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் படத்தில் நடித்திருந்தார். மகான் படத்தில் கதாநாயகிகளாக நடிகை சிம்ரன், வாணி போஜனும், சுருஸ்டி டாங்கே நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் படத்தின் நீளம் கருதி வாணி போஜன் மற்றும் சுருஸ்டி டாங்கே காட்சிகள் எதுவும் அமையவில்லையாம். இதனால் இருவரும் மிகப்பெரிய சோகத்தில் இருந்துவருகிறார்களாம். இப்படி ஏமாத்திவிட்டீங்களே என்று புலம்பியும் வருகிறார்கள்.