இதேவேலையாக திரியும் மகாலட்சுமி!! சைட் பிஸினஸ் செய்து சம்பாதிக்கும் ரவீந்தர் மனைவி.
சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் பல தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. விஜேவாகவும் பணியாற்றி வந்த மகாலட்சுமி திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார்.
மகாலட்சுமி ரவீந்தர்
அதன்பின் சில சர்ச்சைகளில் சிக்கிய மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல விமர்சனங்களை சந்தித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். மகாலட்சுமி சீரியலில் நடித்தும் ரவீந்தர் தயாரிப்பு, பிக்பாஸ் விமர்சனம் எனபிஸியாக இருந்து வருகிறார்.
விளம்பரம்
மகாலட்சுமி தன் பங்கிற்கு சீரியலில் நடித்தும் வருகிறார். இடையில் சேலை மற்றும் அழகு திரவம், அணிகலன்கள் போன்றவற்றை விளம்பரம் செய்து சைட் பிஸினஸ் செய்து வருகிறார். அப்படி விளம்பரம் செய்ய அழகான போட்டோஷூட் செய்து ரசிகர்களை வாய்ப்பிளக்கவும் செய்கிறார். சமீபத்தில் க்யூட்டான போஸ் கொடுத்து விளம்பர புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.