நயன்தாராவை விடாது காப்பி அடிக்கும் மகாலட்சுமி.. இதே வேலையா வெச்சிருக்கும் விஜய் தொலைக்காட்சி..
சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் அவர்களை கடந்த மாதம் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தா மகாலட்சுமி. பேஃட் மேன் என்று கூறப்படும் ரவீந்தரை இரு வருடங்களாக காதலித்து வந்த மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதுதான் மிகப்பெரிய டாப்பிக்காக இருந்து வருகிறது.
காப்பி அடிக்கும் மகாலட்சுமி
திருமணம் செய்து போட்டோவை பகிர்ந்த அடுத்த நிமிடமே நடிகை நயன் தாரா திருமணத்தையே மிஞ்சிவிட்டனர். அந்தளவிற்கு இவர்களின் திருமணம் வைரலானது. திருமணம் முதல் மகாலட்சுமி தாலி வரை நயன் தாராவை அப்படியே காப்பி அடித்து வருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
நயன் தாரா திருமணத்தில் போட்ட சிகப்பு ஆடை, அணிகலன் மற்றும் அவர் தாலியை வெளியில் எடுத்துவிட்டது என்று பலவற்றை காப்பி அடித்து வருகிறார் மகாலட்சுமி. அதேபோல் குலதெய்வத்த்திற்கு தனி விமானத்தை எடுத்து நயன் - விக்கி செய்ததை போன்று செய்துள்ளனர்.

நகைகள் அணிகலன்கள்
மேலும் விஜய் தொலைக்காட்சி அவர்களை வைத்து வந்தாள் மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியை எடுத்துள்ளனர். ஏற்கனவே நயன் தாரா திருமணத்திற்கு முன் விஜய் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. அதேபோல் இவர்களுன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்
அதேபோல் திருமணத்தில் நயன்தாரா எப்படி வந்தாரோ அதேபோல் தான் சிகப்பு ஆடை மற்றும் பச்சை நிற நெக்லஸ் அணிந்து வந்துள்ளார். மொத்தத்தில் அடுத்த சின்னத்திரை நயன் தாரா என்ற பெயரை எடுக்கத்தான் மகாலட்சுமி இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீங்களா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.