மாயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்!! ரவீந்தருக்கு ஷாக் கொடுத்த மனைவி மகாலட்சுமி...
தமிழ் சினிமாவில் ஒருசில படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர். ஃபேட் மேன் என்று அனைவராலும் கூறப்பட்டு வரும் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
கடந்த சில மாதத்திற்கு முன் ரவீந்தர் பல கோடி பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பாட்டார். பின் ஜாமீனில் வெளிவந்த ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தேன் மாயா, பூர்ணிமாவுக்கு எதிராக பேசி வந்த ரவீந்தர், தற்போது மனைவி மகாலட்சுமியுடன் இணைந்து விமர்சன பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், மாயா, பூர்ணிமா பிரிந்து இருப்பதால் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும். இதனால் இருவரும் பிரிய வாய்ப்பு இருந்து தனித்தனியாக விளையாடுவார்கள்.
தனக்கு மாயாவை பிடிக்கும் என்றும் அவரது நடவடிக்கைகள் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மகாலட்சுமி. இதை கேட்டதும் ரவீந்தர் ஷாக்காகி, பிரதீப்பை அனுப்பிய மாயா உங்களுக்கு பிடிக்கும் என்று கூறி முகம் சுளித்த ரியாக்ஷனை கொடுத்துள்ளார். உடனே ரவீந்தர், இந்த அக்கா என்று மகாலட்சுமியை சொல்லி கிண்டல் செய்தார்.
பிரதீப் தான் என்னுடைய ஃபேவரேட் பிளேயர் என்றும், என்னை மாட்டி விடுவதில் முதல் ஆள் இவர் தான் என்றும் மகாலட்சுமி சிரித்தபடி கூறியிருக்கிறார்.
என்னை பொறுத்தவரை பிரதீப்பை அனுப்பி இருக்க கூடாது. அவரது கருத்தை கேட்டாமல் வெளியில் அனுப்பியது நியாயமில்லாதது. எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று மகாலட்சுமி தெரிவித்திருக்கிறார்.