2-ஆம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியின் மகனா இது!! வைரலாகும் புகைப்படம்

Serials Gossip Today Ravinder Chandrasekar Mahalakshmi Actress
By Edward Jun 27, 2023 02:30 PM GMT
Report

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

2-ஆம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியின் மகனா இது!! வைரலாகும் புகைப்படம் | Mahalakshmi Post Her First Husband Son Photo

மகனுடன் வாழ்ந்து வந்த மகாலட்சுமி இடையில் சீரியல் நடிகை ஈஸ்வருடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார். ஈஸ்வரின் மனைவி பிரச்சனை செய்ததால் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி.

அதன்பின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி - ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது.

2-ஆம் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியின் மகனா இது!! வைரலாகும் புகைப்படம் | Mahalakshmi Post Her First Husband Son Photo

விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது சீரியலில் நடித்தும் சில பொருட்களின் விளம்பரப்படுத்தியும் வருகிறார் மகாலட்சுமி.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தந்தையர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அப்புகைப்படத்தில் முதல் கணவருக்கு பிறந்த அவரது மகனும் இருந்துள்ளார். உங்க பையனா இது என்றும் இன்னும் மகன் புகைப்படங்களை பகிருங்கள் என்றும் அவரது ரசிகர்கள் மகாலட்சுமிக்கு வேண்டுகோள் வைத்து கருத்தினை பகிர்ந்து வருகிறார்கள்.