திருமணமாகி 6 மாதத்திற்கு பின் நல்ல செய்தியா? மகாலட்சுமி - ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சமீபத்தில், தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகிய அடுத்த நாளே இணையத்தில் பெரிய பேசு பொருளாக மாறியது. தங்கள் திருமணத்தின் விமர்சனங்களை காதில் வாங்கால் அதற்கான விளக்கங்களையும் கொடுத்து வந்தனர்.
வாரத்தில் ஞாயிற்று கிழமையானால் போது கணவருடன் அவுட்டிங் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ள மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் மகாலட்சுமி கர்ப்பமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருமணமாகி 6 மாதமாகிவிட்டது என்று கூறி யூ அண்ட் மீயூ என்ற கேப்ஷனுடன் இருவரும் ரொமாண்டிக் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறியும் வேறேதும் கிடையாதா என்ற கேள்விகளையும் கேட்டு வருகிறார்கள்.