சைடில் இப்படியொரு விசயம் செய்து காசு சம்பாதிக்கும் நடிகை மகாலட்சுமி!! வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்...

Seeman Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Dec 03, 2022 04:07 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் பல தொடர்களில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. விஜேவாகவும் பணியாற்றி வந்த மகாலட்சுமி திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்தார்.

மகாலட்சுமி ரவீந்தர்

அதன்பின் சில சர்ச்சைகளில் சிக்கிய மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல விமர்சனங்களை சந்தித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். மகாலட்சுமி சீரியலில் நடித்தும் ரவீந்தர் தயாரிப்பு, பிக்பாஸ் விமர்சனம் எனபிஸியாக இருந்து வருகிறார்.

சைடில் இப்படியொரு விசயம் செய்து காசு சம்பாதிக்கும் நடிகை மகாலட்சுமி!! வாய்ப்பிளக்கும் நெட்டிசன்கள்... | Mahalakshmi Starts Her Job On Social Media

விளம்பரம்

இதற்கிடையில் மனைவியுடன் அவுட்டிங், டின்னர் என்று நாட்களை கழித்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஞாயிற்று கிழமையில் மனைவியின் பாசத்தோடு அணைத்தபடி எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் விளம்பரத்திற்காக புதுவகையான சேலைகள் அணிகலன்களையும் விளம்பரம் செய்து காசு பார்த்தும் வருகிறார். தற்போது அதையே முழு வீச்சாக பார்த்தும் சீரியல்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட க்யூட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வாய்ப்பிளந்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.