பெரிய நடிகர்கள் குடிக்க கூப்பிடுவாங்க..போக மாட்டேன்!! பொன்னம்பலம் ஓபன் டாக்..

Gossip Today Actors Tamil Actors Ponnambalam
By Jai Sep 23, 2026 12:00 PM GMT
Report

பொன்னம்பலம்

தென்னிந்திய சினிமாவில் மறக்க முடியாத நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் பொன்னம்பலம். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முரட்டு வில்லனாக திகழ்ந்து வந்த பொன்னம்பலம் சமீபகாலமாக கிட்னி பிரச்சனையில் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நல்லபடியாக குணமடைந்த பொன்னம்பலத்திற்கு ஒருசில நடிகர்கள் உதவி செய்தனர்.

பெரிய நடிகர்கள் குடிக்க கூப்பிடுவாங்க..போக மாட்டேன்!! பொன்னம்பலம் ஓபன் டாக்.. | Ponnambalam Open About Actors Ask Drinks Alcohol

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், என்கூட இருந்தவர்கள் யாரும் பெரிதாக வளர்ந்தது கிடையாது, நிறைய பேர் ஹெல்ப் செய்கிறார்கள். அப்போது பெரிய நடிகர்கள் எல்லோரும் என்னை மது அருந்துவதற்கு அழைப்பார்கள், ஆனால் நான் போகமாட்டேன்.

என் வேலைகள் எல்லாம் முடிந்தப்பின் என்னுடன் படித்தவர்கள், எனக்கு சகோதரர் மாதிரி இருப்பவர்களுடன் செல்வேன். என்னுடன் இருப்பவர்கள் ஏழைகள் தான், அதற்காக பணக்காரர்களை தேடித்தேடி செல்ல முடியுமா? அன்பு கொடுங்கள் அன்பு கொடுங்கள்? என்றா கேட்க முடியும். நாம் தொழில் செய்தால் அன்பு அதுவாகவே வெளியே வரப்போகிறது. யார் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள் என்று பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.