திருமணத்திற்கு பின்னும் அந்த வேலையை ஆரம்பித்த நடிகை மகாலட்சுமி.. இப்படியொரு லுக்கா!!
சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து சர்ச்சைக்குள்ளானது.
பல விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் - மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். கடந்த வாரம் ரவீந்தருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதிலிருந்து மீண்டு வந்த ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு சீரியலில் நடித்து வருகிறார். தற்போது விளம்பரத்திற்காக சேலை, அழகு சாதனப்பொருட்களை விளம்பரம் செய்து காசு சம்பாதித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது புதிய சேலை மற்றும் பிளவுஸ் அணிந்து கியூட் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.