என்னை பார்த்து அஜித் அப்படியொரு வார்த்தை சொல்லிட்டார்!! நடிகை மகேஷ்வரி ஓபன் டாக்..
நடிகை மகேஷ்வரி
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கருத்தம்மா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகேஷ்வரி. அஜித்தின் உல்லாசம் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் மகேஷ்வரி. நடிகை ஸ்ரீதேவியின் சகோதரியின் மகளான மகேஷ்வரி, ஒருசில படங்களில் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, காஷ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பல சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அதில், அஜித் குமார் மீது பயங்கர கிரஷ், அவர்மீது நிறைய மரியாதை இருக்கிறது என்று மகேஷ்வரி கூறியதும் மரியாதை அப்படியே கிரஷ்ஷாக மாறிவிட்டதா என்று ஜெகபதி பாபு கேட்டுள்ளார். அதற்கு அவர், இல்லை, நான் உங்களுக்கு ஒரு சோகக்கதை சொல்கிறேன்.
நீ எனக்கு தங்கச்சி
கிரஷ் என்றால் அவரை ரொம்ப பிடிக்கும், இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தோம். சுமார் ஒன்றரை ஆண்டுகள் நாங்கள் சேர்ந்து வேலை செய்தோம். படப்பிடிப்பின் கடைசி நாள் அன்று, அதாவது பேக்கப் நாளில் என்று கூற ஆரம்பிக்க ஏற்கனவே அந்த விஷயம் தெரிந்த மீனா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய மகேஷ்வரி, கடைசி நாள் என்பதால் அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று சோகமாக இருந்தேன். அப்போது அவரை பார்த்து மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரிமா, வாழ்க்கையில் உனக்கு எது தேவையாக இருந்தாலும் என்னை கூப்பிடு, நான் உனக்காக வருவேன் என்று அஜித் கூறினார்.
அதை கேட்டதும் என்னது நான் தங்கச்சியான்னு ஹார்ட் பிரேக் ஆகியது. அஜித் குமார் சொன்னது அப்போது கஷ்டமாக இருந்தாலும் தற்போது அந்த சோகத்தையை சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார் நடிகை மகேஷ்வரி.