அதிகம் டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்திற்கு அந்த நபர் தான் காரணம்!! பகிர் கிளப்பும் பிரபலம்...

G V Prakash Kumar Actors Tamil Actors
By Dhiviyarajan May 14, 2024 04:03 AM GMT
Report

இந்த வாரம் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்து விஷயம் தான் கோலிவுட் பக்கத்தில் ஹாட் டாபிக்காக்க சென்று கொண்டு இருக்கிறது.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் ஏன்? விவாகரத்து செய்துகொண்டனர்.. என்ன காரணம் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

அதிகம் டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவகாரத்திற்கு அந்த நபர் தான் காரணம்!! பகிர் கிளப்பும் பிரபலம்... | Main Reason For Gv Prakash Saindhavi Divorce

இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், ”ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இரண்டு வருடங்களாகவே இருவரும் சரியாக பேசிக்கொள்வதில்லை. ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்த போது இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஆனால் அவர் நடிகராக மாறியது போது சிறிய விரிசல் ஏற்பட்டது”.

”மேலும் ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவியின் அம்மா தான் செலவு செய்து வந்து இருக்கிறார். ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர்”.

”ஆனால் அவரது மாமியார் அப்படி இல்லை சனாதனத்தை கொள்கை உடையவர். அவர் அழுத்தம் ஜிவி கொடுத்ததால்தான் அமித் ஷாவை சந்தித்தார். இந்த ஜிவி பிரகாஷ்க்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம்” என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.   

பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசிய இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.