மாலத்தீவில் குத்தாட்டம் போடும் மாகாபா ஆனந்த்!! பிரியங்கா திருமணத்திற்கு போகாததற்கு இதுதான் காரணம்..

Ma Ka Pa Anand Priyanka Deshpande Star Vijay Maldives
By Edward Apr 19, 2025 10:30 AM GMT
Report

மாகாபா - பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் மாகாபா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல நிகழ்ச்சிகளை விஜே பிரியங்கா தேஷ்பாண்டேவுடன் இணைந்து தங்களது ஸ்டைலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

மாலத்தீவில் குத்தாட்டம் போடும் மாகாபா ஆனந்த்!! பிரியங்கா திருமணத்திற்கு போகாததற்கு இதுதான் காரணம்.. | Makapa Anand Didnt Attant Priyanka Marriage Reason

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 மற்றும் Oo Solriya Oo Oohm Solriya என்ற நிகழ்சியை இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதற்கிடையில் பிரியங்கா திடீரென டிஜே வசி என்பவரை திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு பல விஜய் டிவி பிரபலங்கள் சென்றிருந்தனர்.

ஆனால் கூடவே இருந்து பணியாற்றி நெருங்கிய நண்பராக இருக்கும் மாகாபா ஆனந்த் திருமணத்திற்கு செல்லாவில்லை. தற்போது அவர் திருமணத்திற்கு செல்லாதது தான் பலரது கேள்வியாக இருந்து வருகிறது. அதிலும் இணையத்தில் ஒரு வாழ்த்து பதிவு கூட மாகாபா ஆனந்த் பதிவிடவில்லை.

மாலத்தீவில் குத்தாட்டம் போடும் மாகாபா ஆனந்த்!! பிரியங்கா திருமணத்திற்கு போகாததற்கு இதுதான் காரணம்.. | Makapa Anand Didnt Attant Priyanka Marriage Reason

திருமண நாள்

இந்நிலையில் மாகாபா ஆனந்த் பிரியங்கா திருமணத்திற்கு செல்லாததற்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாகாபா ஆனந்த் - சூசன் தம்பதியின் தங்களது திருமண நாளை கொண்டாடி வருவதால் இருவரும் மாலத்தீவிற்கு சென்றுள்ளனர்.

அதனால் தான் மாகாபா ஆனந்த் செல்லவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாகாபா ஆனந்த், மாலத்தீவில் ஆட்டம் போட்டு வீடியோ போட்டுள்ளதை பார்த்து பலரும் பிரியங்கா கல்யாணத்திற்கு போகவில்லையா? என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.