சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய மாகாபா ஆனந்த்!! கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தும் வாய்ப்பில்லா பிக்பாஸ் நடிகர்..
பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று 8 சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது சீனியர் 9 சீசன் ஆரம்பிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரியளவில் கவர்ந்திழுத்து வருபவர்கள் விஜே மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா. இருவரும் தங்களின் காமெடி கலந்த உரையாடல்களுடன் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்வதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
அந்தவகையில் மாகாபா ஆனந்த் இந்த வாரம் ஒளிப்பரப்பப்படும் சூப்பர் சிங்கர் 9 எபிசோட்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதில் பிரியங்காவுடன் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ரியோ இந்த வாரம் இணையந்து தொகுத்து வழங்கியுள்ளார்.
மாகாபா ஆனந்த் கோயம்பத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் தான் சூப்பர் சிங்கர் 9 சீசனில் இந்த வார எபிசோட்டில் இருந்து விலகி இருக்கிறார்.