மாலத்தீவில் போட் ரைட் செய்த விஜய் டிவி மாகாபா ஆனந்த்!! வீடியோ

Ma Ka Pa Anand Super Singer Star Vijay
By Edward Apr 25, 2025 06:30 AM GMT
Report

மாகாபா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தேஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

மாலத்தீவில் போட் ரைட் செய்த விஜய் டிவி மாகாபா ஆனந்த்!! வீடியோ | Makapa Anand Wedding Anniversary Maldives Video

விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வந்த நிலையில் பிரியங்காவின் நெருங்கிய நண்பரும் தொகுப்பாளருமான மாகாபா ஆனந்த் பங்கேற்கவில்லை.

அதேபோல் சில நாட்களுக்கு முன் நடந்த அமீர் - பாவ்னி திருமணத்திற்கும் மாகாபா ஆனந்த் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மாகாபா ஆனந்தின் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது மாகாபா தன் மனைவியுடன் மாலத்தீவிற்கு சென்று Wedding Anniversary-ஐ கொண்டாடி வருகிறார். அங்கு செல்ஃப் ட்ரைவ் போட்டிங் செய்துள்ள வீடியோ இணையத்தில் பகிர்ந்துள்ளார்.