வாய்ப்பிற்காக கடைசியில் இப்படியா!! 20 வயது நடிகருடன் ஜோடி போடும் நடிகை மாளவிகா மோகனன்!!

Malavika Mohanan Gossip Today
By Edward Dec 15, 2022 10:29 AM GMT
Report

மலையாள நடிகையாக தமிழில் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கை ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன்.

இப்படத்தினை தொடர்ந்து மலையாள சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருந்த மாளவிகா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். ரசிகர்கள் தன் பக்கம் இழுக்க கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த மாளவிகா மாஸ்டர் படத்தில் பெரிய ஸ்கோப் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார்.

அதன்பின் தனுஷுன் மாறன் படமும் பெரிய தோல்வியால் மார்க்கெட்டை இழந்தார். இதன்பின் பாலிவுட் ஆல்பம் பாடலில் ஆட்டம் போட்டும் இணையத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்தியும் வந்தார்.

இந்நிலையில் மலையாளத்தில் கிரிஸ்டி என்ற படத்தில் கமிட்டாகி அதன் போஸ்டரை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆல்வின் ஹென்ரி என்ற இயக்குனர் இயக்கும் இப்படத்தில் 2 வயதான மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் மாளவிகா மோகனனுடன் நடிக்கவுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், டீச்சர், ஸ்டூடண்ட் கதையா என்று கலாய்த்து வருகிறார்கள்.