ஒரே இரவில் இரு விருதுகள்!! குஷியில் நடிகை மாளவிகா மோகனன்..
மாளவிகா மோகனன்
மலையாளத்தில் வெளிவந்த பட்டம் போலே படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா, ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து கதாநாயகியானார். தற்போது பிரபாஸ் உடன் இணைந்து ராஜா சாப், மோகன் லால் உடன் இணைந்து ஹிருதயபூர்வம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து சர்தார் 2 என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் விருது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மாளவிகா மோகனனுக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
Hottest star of the year மற்றும் Hotstepper of the year என்ற பிலிம்ஃபேர் விருதுகள் தான் மாளவிகா மோகனனுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுகளுடன் இருக்கும் புகைப்படங்களை மாளவிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.