சிக்ஸ்பேக் காமித்து ஒர்க்கவுட்!! மாஸ்டர் பட நடிகை மாளவிகாவின் வெறித்தனமான புகைப்படம்..
மலையாள பேசும் பெண்ணாக மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகி தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கை ரோலில் பேட்ட படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் மாளவிகா. பின் தனுஷின் மாறன் படத்தில் நடித்து கிண்டலுக்கு ஆளாகினார்.
அதன்பின் தன்னை விட சிறியவயது நடிகருடன் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.
எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, தற்போது ஒல்லியாக மாறி தீவிர உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.
சிக்ஸ்பேக் காமித்து ஒர்க்கவுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.


