மாஸ்டர் - மாறன்! மாளவிகா மோகனுக்கு இப்படியொரு காமினேஷன் நடிப்பா?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாகவும் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வந்த மாளவிகா இணையத்தில் க்ளாமர் போட்டோஷுட் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தார்.
இதன்மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க கமிட்டானார். அப்படம் அவருக்கு பெரியளவில் ஸ்கோப் கொடுக்கவில்லை என்று பலர் விமர்சித்தனர். மாஸ்டர் படத்தில் நடித்து முடித்தபின் நடிகர் தனுஷின் மாறன் படத்தில் கமிட்டாகினார்.
தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது. படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு மாளவிகாவின் கதாபாத்திரத்தினை தான் அதிகளவில் விமர்சனம் செய்து கேலி செய்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
அப்படி மாஸ்டர் - மாறன் படத்தில் நடித்த சில காட்சிகள் அப்படியே இருக்கிறது என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க.



