ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ்!! டியூட் படத்துக்காக 15 கோடி சம்பளமா!! மமிதா பைஜூ ஓபன் டாக்..
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸான படம் தான் டியூட். இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரிலீஸாகி 6 நாட்களான நிலையில் டியூட் படம் திரையரங்கில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை அள்ளியுள்ளது. இதனை படகுழுவினர் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்ததும் நடிகை மமிதா பைஜூவின் நடிப்பு தான்.
15 கோடி சம்பளமா
இந்நிலையில் இப்படத்திற்காக மமிதா பைஜூ, சுமார் ரூ. 15 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக செய்திகள் பரவியது. இதனையறிந்த மமிதா பேட்டியொன்றில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், சமூகவலைத்தளத்தில் நான் ரூ. 15 கோடி சம்பளமாக பெற்றதாக செய்தி பரவி வந்தது. நான் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இல்லாததால் எனக்கு அந்த விசயம் தெரியாது. எனக்கு ஒருவர் அந்த செய்தியின் லிங்கை அனுப்பினார். அந்த கமெண்ட் பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.
மக்கள் அதை உண்மை என்று நம்பியுள்ளார்கள். சிலர் இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டாரா? என்றும் கூறினர். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி எல்லாம் உண்மை கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மமிதா பைஜூ விளக்கமளித்தார்.