மாமியார் பர்த்டேவுக்கு கன்னத்தில் முத்தம்!! வரலட்சுமி கொடுத்த ரியாக்ஷன்..
வரலட்சுமி
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இப்போது வரலட்சுமி, விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் கமிட்டாகி இருக்கிறார்.

நிக்கோலஸ் சச்தேவ்
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மும்பையை சேர்ந்து நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் நடுவராகவும் வலம் வந்தார்.
வரலட்சுமியின் பிறந்தநாளுக்கு, பிங்க் நிறத்திலான 'போர்ஷே' ரக காரை அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்திருந்தார். தீபாவளி அன்று கூட திருவிழா போல் தன்னுடைய குடும்பத்துடன் வரலட்சுமியின் கணவர் கொண்டாடினார்.

மாமியாரின் பிறந்தநாள்
தற்போது தன்னுடைய மாமியாரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் போது முகத்தில் கேக்கை பூசி, நெற்றியில் பாசத்தோடு முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நிக்கோலாய். இதனை பார்த்த வரலட்சுமியும் அவரது சகோதரியும் தங்களின் ரியாக்ஷனை கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.