விஜய்யை பார்த்து நடுங்கி பேசவில்லை!! நடிகை மமிதா ஓப்பன் டாக்...
மமிதா பைஜு
பிரேமலு என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை மமிதா பைஜு. இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதன்பின் சில காரணங்களால் வெளியேறினார் மமிதா.
பின் பிரேமலு படம் கொடுத்த அதிக வரவேற்பை அடுத்து இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் மமிதா பைஜு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
விஜய்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், விஜய் சாரை நேரில் பார்த்ததும் பதற்றம் அடைந்தேன். அவரை பார்த்து ஹாய் சார் மட்டுமே கூறினேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. கைகள் நடுக்கத்துடன் இருந்தது. இதனை அறிந்த விஜய் சார் என் அருகில் வந்து மெதுவாக ஹாய் மா என கூறி கைக்கொடுத்து அரவணைத்தார்.
அந்த நிமிடங்களை என்னால் மறக்க முடியவில்லை. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. விஜய் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை என்று பூரிப்புடன் மமிதா பைஜு தெரிவித்துள்ளார்.