கண்ட இடத்தில் கைவைத்த நபர்கள்.. சிக்கி தவித்த மமிதா பைஜு
Indian Actress
Tamil Actress
Actress
Mamitha Baiju
By Dhiviyarajan
மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிற மொழி படம் என்றாலும் தமிழ் நாட்டு ரசிகர்கள் நல்ல ஒரு வரவேற்பை கொடுத்தனர்.
இப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மமிதா பைஜு பிரபலமாகிவிட்டார். இதையடுத்து இவர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ரிபல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு மக்கள் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.
அண்மையில் மமிதா சென்னையில் உள்ள விஆர் மாலுக்கு கடை திறப்பு விழாவிற்காக வந்தார். அங்கு சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார் மமிதா.
இதை சரியாக பயன்படுத்தி கொண்ட சிலர் கண்ட இடத்தில் கை வைத்தனர். இதனால், மமிதா மிகவும் தர்ம சங்கடத்திற்கு ஆள் ஆனார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.