டாப் நடிகருடன் விவாகரத்து கதையில் நடிகை ஜோதிகா!! நன்றி சொன்ன சூர்யா..
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. வாளி படத்தில் சிறு ரோலில் நடித்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து ஒரே ஆண்டில் முகவரி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி, சினேகிதியே போன்ற படங்களில் நடித்து டாப் நடிகையாகினார். பின் சூர்யாவுடன் காக்க காக, மாயாவி, பேரழகன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த போது இருவரும் காதலித்து வந்தனர்.
பின் குடும்பத்தினர் சம்மதத்துடன் சூர்யாவை 2006 திருமணம் செய்து கொண்டு ஒருசில படங்களில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்த்யு விலகினார். மகன் மகள் பிறந்து வளர்ந்த பின் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றி மொழி போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் மம்மூட்டி நடித்த காதல் டி கோர் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அரசியலுக்கு நுழைய இருக்கும் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெறும் கதையில் நடித்திருக்கிறார் ஜோதிகா.
இந்த கதை தமிழ் சினிமாவில் ஒருசில நடிகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்துள்ளதாக காதல் டி கோர் படத்தின் டிரைலர் வீடியோ பார்த்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கையை எப்படி கொண்டாடவேண்டும் என்பதை காட்டியதற்கு நன்றி பொண்டாட்டி என்று கூறியும் ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.