இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மனைவியை கொல்ல மனித வெடிகுண்டாக மாறிய கணவர்..
பெரும்பாலான கணவர்கள் மனைவியை கொடூரமாக தாக்குவது, மதுபானம், மனம் ஒத்துபோகாதது, தவறான செயல் போன்ற காரணங்களால் அவர்களை கொல்ல திட்டமிட்டு வருவதுண்டு. அதை செயல்படுத்தி கம்பியும் எண்ணுவதுண்டு. அந்தவகையில் தனக்கு பிடிக்காத ஒன்றை மனைவியோ அல்லது கணவரோ அதை செய்யும் போது பிரச்சனைகள் ஆரம்பித்து கொலை சம்பவத்தில் முடிவதுண்டு.
அந்தவரிசையில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்தில் ஒரு கணவர் தன் மனைவியை கொள்ள மனைத வெடிகுண்டாக மாறி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 61 வயதான பை லாங்தியாங்லிமி என்ற பெண்மணி ரோமிலிங்கிலினா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து ஒரு மகளையும் பெற்றனர். சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்ட பின் கடந்தாண்டு பிரிந்தனர்.
இதையடுத்து யாங்லிமி ஒரு பகுதியில் காய்கறி கடை வைத்திருந்து மகளுடன் வாழ்ந்து வந்தர். அப்போது அங்கு ரோமிலிங்கிலினா சென்று பீடி ஒன்றினை வாங்கியதுடன் உடல் நிலை சரியில்லை என்று கூறியதுடம் மயக்கம் வருவதுபோல் நடித்து மனைவியை கட்டிபிடித்துள்ளார். அப்படி நடந்த சில நிமிடத்தில் உடம்பில் ஜெல்லட்டின் வெடிபொருள் குச்சிகளை கட்டி சென்றிருக்கிறார். பீடி நெருப்பின் மூலம் அவற்றை பற்றவைத்து வெடிக்கசெய்துள்ளார்.
இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்துள்ளனர். மனித வெடிகுண்டாக மாறி கணவன் மனைவியை கொன்றிருப்பது இந்தியா முழுவதிலும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.