சொந்த திருமணத்திற்கே போக மறந்த நபர்.. இப்படி ஒரு ஆளா?

Marriage
By Parthiban.A Jun 19, 2022 07:30 AM GMT
Report

மனிதர்களுக்கு நியாபக மறதி எப்போதாவது வருவது சகஜம்தான். ஆனால் தனது சொந்த திருமணத்திற்கே ஒரு நபர் போகாமல் இருந்திருக்கிறார். ஏன் என கேட்டால் காதலி தனக்கு நினைவூட்டவில்லை என விளக்கம் வேறு கூறி இருக்கிறார்.

ஒடிஷாவை சேர்ந்த எம்எல்ஏ விஜய் ஷங்கர் தாஸ் தான் இப்படி செய்திருக்கிறார். அவரது காதலியை பதிவு திருமணம் செய்ய இருந்த நிலையில் அன்று அவர் வரவில்லையாம்.

அவர் திருமணத்திற்கு வரவில்லை, போன் அழைப்புகளை தவிர்க்கிறார், அவரது உறவினர்கள் மிரட்டுகிறார்கள் என அந்த பெண் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

அது பற்றி விசாரணை நடத்திய நேரத்தில் தான் விஜய் ஷங்கர் தாஸ் தனக்கு திருமண தேதியை காதல் நினைவூட்டவில்லை, மறந்துவிட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.

 


Gallery