அயன் சூர்யா மாதிரி யோசிச்சிருக்கான்! இப்படியொரு பிளான் போட்டு 61 லட்சத்தோடு மாட்டிக்கிட்டானே

Viral Video Trending Videos
By Edward Jun 24, 2022 06:30 PM GMT
Report

பல கடத்தல் சம்பவங்கள் செய்து போலிசில் மாட்டுவது தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் படத்தில் காட்சிப்படுத்துவதை போன்று அப்படியே காப்பி அடித்த கடத்தல் சம்பவங்களும் நடைபெறும்.

அந்தவகையில் சட்டைக்குள் 61 லட்சம் மதிப்பிலான கட்டுக்கட்டாக பணத்தை ஆட்டையை போட்ட இளைஞரை போலிசார் வலைத்து பிடித்துள்ளனர். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த சாய்கிருஷ்ணா என்ற இளைஞர் சட்டைக்குள்ளும் பைக்குள்ளும் கட்டுக்கட்டாக வைத்திருந்த 61 லட்ச பணத்தோடு சிக்கியுள்ளான்.

பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலிசார் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட இளைஞரின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். அயன் பட சூர்யாவையே மிஞ்சிடுவான் போல என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.