நடிகரின் மனைவிக்கு அந்த மாதிரி வீடியோவை அனுப்பிய நபர்! ஷாக்கான நகுல்..

Tamil Cinema
By Edward Apr 25, 2022 03:44 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் நகுல். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

முன்னணி நடிகர் என்ற இடத்தினை பிடிக்க முடியாமலும் வாய்ப்புகள் அமையாமலும் இருந்த நகுல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார். சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2016ல் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நகுல் சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தண்ணீர் தொட்டியில் பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்தெடுத்தனர்.

இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதியின் சமுகவலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் ஆபாச வீடியோக்களை அனுப்பி ஐ லவ் யூ என்ற மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். இதுபோல் நடப்பது ஒன்றும் புதிதல்ல என்று கூறி பதிவினை போட்டுள்ளார் ஸ்ருதி.