கடவுள்னு ஒருத்தர் இருக்காரு.. கங்குவா தோல்விக்கு காரணமே இவர் செய்த மோசடிதான்.. பிரபல தயாரிப்பாளர்...

Suriya Gossip Today Kanguva K. E. Gnanavel Raja
By Edward Dec 05, 2024 08:30 AM GMT
Report

மாணிக்கம் நாராயணன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமாரை கண்டபடி விமர்சித்தும் திட்டியும் பேட்டியளித்து வருபவர் தான் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

கடவுள்னு ஒருத்தர் இருக்காரு.. கங்குவா தோல்விக்கு காரணமே இவர் செய்த மோசடிதான்.. பிரபல தயாரிப்பாளர்... | Manickam Narayanan Slams Gnanavelraja Kanguva Flop

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித், மணிரத்னம் பற்றி மோசமான பேசியிருந்தார். இதனை தொடர்ந்து கங்குவா படத்தின் தோல்வி குறித்தும் பேசியுள்ளார். சூர்யா, கார்த்தி படங்களை தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

கங்குவா தோல்வி

இந்த ஆண்டு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான தங்கலான், கங்குவா படங்கள் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. இதற்கு காரணமே பலரது சாபம் தான். கடவுள்னு ஒருத்தர் இருக்காரு, சினிமாவில் பலரும் ஏமாற்றுப் பேர்வழிகளாகவெ உள்ளனர்.

கடவுள்னு ஒருத்தர் இருக்காரு.. கங்குவா தோல்விக்கு காரணமே இவர் செய்த மோசடிதான்.. பிரபல தயாரிப்பாளர்... | Manickam Narayanan Slams Gnanavelraja Kanguva Flop

அதனால் தான் தயாரிப்பு தொழிலையே விட்டுவிட்டேன். பைனான்சியர் ஒருவரிடம் 7 கோடி கடன் வாங்கினா அந்த கடனை திருப்பித்தராமல் வழக்குப்போட்டு 1 கோடி தான் தரமுடியும் என ஏமாற்றினால் அப்புறம் அவன் படம் எப்படி ஓடும்.

சமீபத்தில் கங்குவா படம் வெளியாவதற்கு முன்பே ஞானவேல் ராஜா மீது ஏகப்பட்ட கடன் வழக்குகள் தான் குவிந்துகிடந்தன என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.