அஜித், மணிரத்னம் என்ன கிழித்தார்கள்!! காட்டமாக பேசிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்..
மாணிக்கம் நாராயணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமாரை கண்டபடி விமர்சித்தும் திட்டியும் பேட்டியளித்து வருபவர் தான் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தியேட்டரில் விமர்சனம் கேட்கக்கூடாது என்று சொல்வது குறித்து பேசியுள்ளார்.
பேச்சுரிமையை நிறுத்த முடியாது. இவனுங்க ஒழுங்கா படம் எடுக்காமல், யாரோ ஒரு வயசானவரை தேடுவதெல்லாம் கேவலமா இருக்கு. படத்தை ஒழுங்கா எடுங்கள். கத்துக்கோங்க.
அஜித், மணிரத்னம்
என்னிடம் வேலை செய்தவர்களை கேளுங்கள். மகிழ்திருமேனியை கூப்பிட்டு, நல்லா படம் எடுக்கவில்லை என்றால் காதை அறுத்துக்கொள்வேன் என்று சொன்னான்ல என்று கேளுங்கள். வடிவேலு, தம்பிராமையாவை கேளுங்கள், பி வாசுவை கேளுங்கள்.
குப்பை படம் என்று சொன்னேன், அதைமீறி போடுங்க என்று சொன்னானுங்க, ஒடல. நான் கண்டவனை திட்டுறேன்னு நான் முட்டாள் ஆகமாட்டேன். உன்னால் என்னை ஒன்னும் புடுங்க முடியவில்லை.
அஜித்குமார் என்ன கிழித்தான், அவன் வாங்கிய காசைத்தானே கேட்டேன். மணிரத்னம் என்ன பண்ணான் என்றும் விமர்சகர்கள் விமர்சனம் பண்ணலாம் என்றும் கண்டபடி பேசியிருக்கிறார்.
பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் வரும் தகவல்கள், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசியதைத்தான் இங்கு பதிவு செய்திருக்கிறோமே தவிர, விடுப்பு தளத்திற்கு அவரது கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.