ரகசியமாக முடிந்த இரண்டாம் திருமணம்!! ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனுக்கு பிறந்த குழந்தை..
Aishwarya Rajesh
Bigg Boss
Actors
Tamil Actors
By Edward
மணிகண்டன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது சகோதரர் மணிகண்டன், சீரியல்களில் நடித்து ஒருசில படங்களில் நடித்தும் வருகிறார்.
அவள், அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள மணிகண்டன், தன்னுடன் நடித்த நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2வது திருமணம்
இருவருக்கும் மகன் பிறந்த நிலையில் சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இருவரும் எப்போது பிரிந்தனர், விவாகரத்து எப்போது செய்தார்கள் என்று யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.
தற்போது மணிகண்டன் 2வது திருமணம் மூலம் பெண் குழந்தை பிறந்ததாக கூறி இரண்டாம் மனைவி, குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.