எல்லோரையும் அதை செய்ய சொல்கிறார், நடிக்க மாட்டேன்.. ராஷ்மிகா அதிரடி பேச்சு

Rashmika Mandanna Actress Kuberaa
By Bhavya Jul 03, 2025 11:30 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா 

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இருப்பினும், படத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்தது.

இவர் கடைசியாக சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குபேரா படத்தில் நடித்திருந்தார். தற்போது ராஷ்மிகா பாலிவுட்டில் ''தமா'' என்ற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லோரையும் அதை செய்ய சொல்கிறார், நடிக்க மாட்டேன்.. ராஷ்மிகா அதிரடி பேச்சு | Rashmika Open Talk About Animal Movie

அதிரடி பேச்சு 

இந்நிலையில், இந்த விமர்சனங்கள் குறித்து நடிகை ராஷ்மிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது. படத்தில் ஹீரோ புகைபிடிக்கிறார் என்றால், அவர் எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிறார் என்று அர்த்தம் இல்லை.

அப்படி நினைத்தால் அதுபோன்ற படங்களை பார்க்காதீர்கள். இங்கே படத்தை பார்க்க சொல்லி யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

சினிமா ஒரு பொழுதுபோக்கு துறை, அனைத்தையும் விமர்சிப்பது தவறு. நான் திரையில் புகைபிடிப்பது போன்று நடிக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.     

எல்லோரையும் அதை செய்ய சொல்கிறார், நடிக்க மாட்டேன்.. ராஷ்மிகா அதிரடி பேச்சு | Rashmika Open Talk About Animal Movie