ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் என் கடைசி நாள்.. மணிமேகலை உருக்கம்

Zee Tamil Manimegalai Dance Jodi Dance
By Bhavya Jul 21, 2025 05:30 AM GMT
Report

மணிமேகலை

விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த மணிமேகலை அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.

அதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தது.

ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் என் கடைசி நாள்.. மணிமேகலை உருக்கம் | Manimegalai Emotional Post Goes Viral

என் கடைசி நாள்

தற்போது, இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்து விட்டது. இந்நிலையில், மணிமேகலை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், " இன்று டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங். இந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் பாராட்டுக்கு மக்களுக்கு நன்றி. மேலும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.