பிரியங்கா - மணிமேகலை பிரச்சனை!! பிக் பாஸ் 8 வீட்டிற்குள் பேசிய போட்டியாளர்கள்..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் சின்னத்திரையே அதிரவைத்த நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டது குக் வித் கோமாளி சீசன் 5.
மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு விஜே பிரியங்கா தான் காரணம் என்று மணிமேகலை மறைமுகமாக விமர்சித்தார்.
சுயமரியாதை முக்கியம் என்று முடிவு எடுத்ததால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என மணிமேகலை கூறியதை அடுத்து பல பிரபலங்கள் இதுபற்றி பேசி பெரியளவில் பிரச்சனையாக்கினார்.
பிரியங்கா - மணிமேகலை
இதுகுறித்து பிரியங்கா வெளிப்படையாக எந்த கருத்தும் வெளியிடாத நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கப்பட்டு அப்படியே அந்த பிரச்சனை நின்றுப்போனது.
இந்நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜே விஷால், சாச்சனா மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் இணைந்து பிரியங்கா - மணிமேகலை சர்ச்சை குறித்து பேசியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..